Monday, September 5, 2011

10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு

தமிழகத்தில் இந்தாண்டு 10 ஆயிரம் பேருக்கு சுய வேலை வாய்ப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற இளைஞர்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலை வாய்ப்பு உருவாக்க "வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்' ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம், ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்கு மிகாமலும், குறைந்த பட்சம் ஒரே பகுதியில் மூன்று ஆண்டுகள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இந்தாண்டு 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அடுத்தாண்டு மார்ச்க்குள் நிறைவேற்ற அந்தந்த மாவட்ட தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Monday, August 22, 2011

சிறுபான்மை மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையின் கீழ் பிளஸ் 1 பயிலும் சிறுபான்மை இனமாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. இதை பெற 10ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று, தற்போது பிளஸ் 1ல் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும், 20 ரூபாய் நீதிமன்ற சாரா முத்திரை தாளில் உறுதி ஆவணம் விண்ணப்பித்து, பயிலும் கல்வி நிலையத்தில் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை இணைய தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இவற்றை கல்வி நிலைய தலைமை ஆசிரியர், "தி செக்ரட்டரி, மவுலானா ஆசாத் எஜூகேஷன் பவுன்டேஷன், சிலம்ஸ் ரோடு, நியு டில்லி' என்ற முகவரிக்கு ஆக.31க்குள் அங்கு சென்று சேரும் வகையில் வைக்க வேண்டும்.


-தினமலர்-