Tuesday, April 28, 2009

மதுபான பழக்கம் : உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மிகுந்த கவலை

க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளிடையே அ‌திக‌ரி‌த்து வரு‌ம் மது‌ப்பழ‌க்க‌த்‌தி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌மிகு‌ந்த கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. கல்வி நிறுவனங்களில் சக மாணவர்களை ராகிங் செய்யு‌ம் கொடுமையு‌ம், இதனா‌ல் கொலை அ‌ல்லது த‌ற்கொலை செ‌ய்ய‌ப்படு‌ம் பிரச்சினை தொடர்பாக, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கு நே‌ற்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், அசோக் குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்பு இ‌ந்த வழ‌க்கை விசாரணைக்கு ஏ‌ற்றது.அப்போது, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கம் காரணமாக ராகிங் என்ற பெயரில் புதிதாக சேரும் மாணவர்களை மூத்த மாணவர்கள் துன்புறுத்துவது மிகுந்த கவலை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ராகிங்கை தடுப்பது தொடர்பான யோசனைகளை தெரிவிக்குமாறு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை பதில் அளிக்காத மாநிலங்கள், அடுத்து கட்ட விசாரணைக்கு முன்பு தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு அவர்கள் தள்ளி வைத்தனர்

கொரிய செல்பேசிகள் வேண்டாம்

விலை குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளுடனும் இருக்கிறது என்று கொரியன் அல்லது சீன செல்பேசிகளை வாங்க வேண்டாம்.ஏன் என்றால், ஏற்கனவே இருக்கும் கொரியன் மற்றும் சீன செல்பேசிகளின் இணைப்புகள் வரும் ஜனவரி 6ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட உள்ளன.

அன்றைய தினம் இதுபோன்ற 2.5 கோடி செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன.இதற்குக் காரணமும் உண்டு...முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.

ஆனால் இந்த கொரியன் செல்பேசிகளில் இந்த எண் இருக்காது. இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத கொரிய செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. மேலும், இந்த செல்பேசியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, ஐ.ம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்தே, ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்பேசி நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து இந்த நடவடிக்கை ஜனவரி 6ஆம் தேதி அமலாகிறது

மலேசியாவில் அனுமதி கட்டணம் இரட்டிப்பு

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டு வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பாக்கியதால், தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவே மலேசியாவில் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் உள்ளன.

இந்திய, சைனீஸ், மேற்கத்திய உணவுகள் சமைப்பதில் தமிழக தொழிலாளர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளதால், இந்த ஓட்டல்களில் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுதவிர தோட்ட வேலை, தொழிற்சாலைகளில் தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மலேசியாவையும் விட்டுவைக்கவில்லை. அதனால், உள்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.

இப்போது மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வேலை உரிமை கட்டணத்தை புதுப்பிப்பதற்கு 1,800 மலேசிய வெள்ளியும், தங்குமிட கட்டணமாக 200 வெள்ளியும் அரசுக்கு கட்ட வேண்டும். இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை புதுப்பிப்பு கட்டணமாக ஆண்டுக்கு 3,600வெள்ளியும், தங்குமிடத்துக்கு 400 வெள்ளியும் செலுத்த வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக தொழிலாளர்கள் தலைகளில் பேரிடியாக இறங்கி உள்ளது. அவர்களுக்கு குறைந்த பட்சமாக 600 வெள்ளியில் இருந்து அதிகபட்சமாக 1,500 வெள்ளி வரை ஊதியம் கிடைக்கிறது.

தமிழகத்தில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் வரை செலவழித்து அங்கு செல்கின்றனர். இப்போது வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கியதால் ஆண்டுக்கு 4,000 வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ.55,000) செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அ‌வ்வளவு பண‌த்தை செலு‌த்த முடியாத தமிழக தொழிலாளர் 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏ‌ப்ர‌ல் 1‌ம் தே‌தி முத‌ல் வேலை வா‌ய்‌ப்பு உ‌ரிம க‌ட்டண‌ம் இர‌ட்டி‌ப்பா‌கிறது. இதனால த‌மிழக தொ‌ழிலாள‌ர்க‌ள் பலரு‌ம் வேலை இழ‌ந்து நாடு ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது

ஆங்கிலக் கல்வி மையம்

ஆங்கில மொழியில் வல்லமை பெறுவதற்கான கல்வி மையம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் விரைவில் சென்னையில் துவங்க திட்டமிட்டுள்ளது.தொழில் மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய நலன்களுக்காக இங்கு ஆங்கில மொழி வகுப்புகள் நடைபெறும். பாடத் திட்டங்கள் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் காலக் கட்டத்திற்கான பதிவுகள் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வகுப்புகள் 4ஆம் தேதி துவங்குகின்றன.ரெகஸ் சிட்டி சென்டரில் முதலில் 3 வகுப்பறைகளை திறக்கவுள்ளது. அண்ணாசாலையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் வளாகம் புணரமைக்கப்பட்டு வருவதால் அதுவரை இங்கு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிகிறது.இந்த ஆங்கில வகுப்புகளுக்காக இந்தியாவிலிருந்து 12 ஆசிரியர்களும், பிரிட்டனிலிருந்து 3 கல்வியியல் துறை மேலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கென்றே உயர்கல்வி தகுதி பெற்றவர்கள். அதாவது செய்தல் வழி கற்றல் என்ற புதிய முறைகளின் படி பாடம் நடத்தப்படும்.3 பெரும் பிரிவுகளின் கீழ் இந்த மையத்தில் ஆங்கிலக் கல்வி அளிக்கப்படுகிறது.

1. ஆங்கில பரிணாமம் (English Evolution):

இதில் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் வாசித்தல், இலக்கணம் அருஞ்சொற்பொருள் ஆகியவை கற்றுத் தரப்படும்.

2. ஆங்கில எக்சிகியூட்டிவ் (English Executive): இந்தப் பிரிவின் கீழ் பணியிடத்தில் ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது குறித்த பாடங்கள் இடம்பெறும்.

3. ஆங்கில தாக்கம் (English Impact): நேர்முகத் தேர்வுகள், குழு விவாதங்கள், மற்றும் மேடைப் பேச்சு ஆகியவற்றில் தன்னம்பிக்கை பெறத் துடிப்பவர்களுக்கு இந்த பாடத்திட்டம் உதவும்.பதிவு செய்யப்படுவதற்கு முன் அனைத்து மாணவ‌ர்களுக்கும் தேர்வு நடைபெறும். அதாவது அவரவ‌ர்களுக்கு பொருத்தமான பிரிவு எது என்பதை அறிய இது நடத்தப்படுகிறது. இது எழுத்து வழி தேர்வு, வாய்மொழி நேர்காணல் மற்றும் ஆசிரியருடன் ஆலோசனை அமர்வு ஆகிய வழிமுறைகளில் நடத்தப்படும்.

ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் 7 வார காலங்களுக்கு 42 மணி நேரங்கள் வகுப்புகள் நடைபெறும்.

இந்த கல்விக்கான கட்டணம் ரூ.6,500 முதல் ரூ.7.000 வரை நிர்ணயி‌க்க‌ப்பட்டுள்ளது.

இந்த தொகையில் பாடப் புத்தகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினர் அட்டை ஆகியவையும் உள்ளடங்கும்.பு

து டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலக் கல்வி மையத்தில் ஆண்டு தோறும் 7,000 மாணவர்கள் ஆ‌ங்‌கிலம் கற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு 044 4205 0600 என்ற தொலை பேசி எண்ணை அணுகவும்.

ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகலாம்

மாணவர்களே ஏழ்மை ஒரு தடை அல்ல. லட்சியம் இருந்தால் ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம் என்று காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் சைலேந்திரபாபு கூறினார்.பிளஸ்-2 படித்துவிட்டு உயர் கல்வியில் என்ன பாடத்தை எடுத்து படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றியும், பட்டபடிப்பு படித்த மாணவர்களுக்கு எத்தகைய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்பது பற்றியும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை புழல் ஸ்ரீநல்லழகு பாலிடெக்னிக்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பேசினா‌ர். "மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து பாடத்தை நன்றாக படியுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தலைமை‌க் காவல‌ர் ஒருவர் தனது வீட்டை விற்று மகனை பொ‌றி‌யிய‌ல் படிக்க வைத்திருக்கிறார். இதே போல தாலியை விற்றாவது படிக்க வைக்கவேண்டும் என்று தாய் நினைக்கிறார்.யார் என்ன செய்தாலும் படிக்க வேண்டியது மாணவர்கள் தான். எந்த படிப்பு படித்தாலும் வேலை உறுதி. ஆனால் படிக்கும் படிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் ஜா என்பவர் அமெரிக்காவில் உள்ள மோட்டோரோலா கம்பெனியில் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய வருட சம்பளம் 520 கோடி. அதற்கு காரணம் அவருடைய திறமை.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 21 தாண்டியிருக்க வேண்டும். பிற்பட்டோர் 33 வயதுவரை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர் 35 வயது வரை எழுதலாம்.3 கட்ட தேர்வுகள் உண்டு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் உண்மையாக பதில் அளிக்கவேண்டும். அந்த நேரத்திற்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும் (பிரசென்ஸ் ஆப் மைண்ட்) தமிழில் கூட எழுதலாம்.விடா முயற்சி இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம். நான், இறையன்பு போன்றவர்கள் எல்லாம் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். முயற்சியின் காரணமாக இந்த பதவியை அடைந்து இருக்கிறோம்.

கல்லூரியில் படிக்கும்போதே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய ஆங்கிலத்தில் பேச பயிற்சி பெறுங்கள். இரு கைகள் இல்லாதவர்கள் கூட எத்தனையோ சாதனை புரிந்துள்ளனர். காரணம் அவர்களின் தீராத ஆர்வம்.எனவே முயற்சி செய்தால் ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது. விடா முயற்சி இருந்தால் நினைத்த இலக்கை எய்த முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாகலாம்" எ‌ன்றா‌ர். இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.

Thursday, April 23, 2009

இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்

புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இதேநிலை நீடித்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் உயிரிழப்பு 10 கோடியை எட்டும் என்றும், இந்த உயிரிழப்புகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கிறார்கள்.
உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோயாளிகள் அதிகம். 90 விழுக்காடு வாய்ப்புற்று நோய் புகையிலையால் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் அனைத்து விதமான புற்றுநோய்களில் 40 விழுக்காடுபுகையிலையால் உண்டாகிறது.புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களையும், உயிரிழப்புகளையும் உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கடந்த 2003ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனம் ஒன்றை கொண்டு வந்தது.உலகிலேயே இதுதான் உடல் நலம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட முதல் பிரகடனம் ஆகும். இந்தியா இதன் கூறுகளை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இதற்கான தெற்காசிய நாடுகளின் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இந்தியா பொறுப்பேற்றது.இந்தப் பிரகடனத்திற்கு முன்பே புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை 2003, மே 18ஆம் தேதி இந்தியா இயற்றியது.
பிரகடனத்தில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.இந்தியா 2004 பிப்ரவரி 5-ம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டது. இதில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த முடிவெடுத்தது. புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் 2003 :சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத்தை தடை செய்வது மற்றும் விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம் 2003 புகையிலையின் அனைத்து வடிவங்களுக்கும் - சிகரெட், சிகார், சீரூட்ஸ், பீடி, குட்கா, பான்மசாலா, கைனி, மாவா, மிஷ்ரி, ஸ்னப் - பொருந்தும். இச்சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது
முக்கிய கூறுகள் :பொது இடங்களில் புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவது, மைனர் குழந்தைகளுக்கு புகையிலைப் பொருட்களை விற்பது, கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது ஆகிய அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. புகையிலைப் பொருட்களின் பாக்கெட் மீது புகைப்பட எச்சரிக்கை விடுப்பது, புகையிலைப் பொருட்களில் உள்ள தார் மற்றும் நிக்கோடின் பொருட்களை ஒழுங்குபடுத்துவது ஆகியவையும் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை :அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரங்குங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், ரயில்வே காத்திருப்பு அறை, சொகுசு விடுதிகள், உணவு விடுதிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் ஆகிய அனைத்தும் பொது இடங்களில் அடங்கும்.உணவு விடுதிகள், சொகுசு விடுதிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் புகை பிடிப்பதற்கென தனி அறையை ஏற்படுத்தவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால் இப்புகை மற்ற இடங்களுக்கு பரவக் கூடாது. அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிப்பதை தடை செய்யும் சித்திர குறியீடுகளை நன்கு தெரியுமாறு வைக்க வேண்டும். தடையை மீறி புகை பிடிப்போர் மீது சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் புகையில்லா இடம் - இங்கு புகை பிடிப்பது குற்றமாகும் என்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை அட்டைகளை ஆங்காங்கே வைக்க வேண்டும். இந்த விதிகள் சென்ற அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்துள்ளன.
அமலாக்க அதிகாரிகள் :கலால் வரி, வருமான வரி, சுங்க வரி, விற்பனை வரித் துறை ஆய்வாளர்கள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆகியோர் தமது வரம்புக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க வேண்டும். இதே போன்று ரயில் நிலைய அதிகாரி, மத்திய மற்றும் மாநில கெசடட் அதிகாரிகள், அஞ்சல் துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், விமான நிலைய மேலாளர் மற்றும் பிற அலுவலர்கள், பொது சுகாதார இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், புகையிலை தடுப்பு மைய அதிகாரிகள் உள்ளிட்ட பலரை இச்சட்டம் வகைப்படுத்தியுள்ளது.நமது நாட்டில் மக்களின் உடல் நலனுக்கு பெரிதும் கேடு விளைவிக்கும் புகையிலை பழக்கத்தை தடுக்க, சட்டங்கள், தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில முரண்பாடுகளும் நெருடத்தான் செய்கின்றன.புகையிலை பழக்கத்தைத் தடுக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இவ்வேளையிலும் மத்திய அரசின் நிறுவனமான தேசிய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருகிறது.பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
நமது நாட்டில் புகையிலை உற்பத்தி இன்னும் சட்டரீதியாக தடை செய்யப்படவில்லை என்ற பதில் கிடைக்கிறது. புகையிலை பணப்பயிராக பாட புத்தகங்களில் இடம் பெற்று வருகிறது. நமது நாட்டில் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புகையிலை பயிராகிறது. தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ஹெக்டேரில் புகையிலை பயிர் செய்யப்படுகிறது. நமது நாட்டின் வருடாந்திர புகையிலை உற்பத்தி 700 மில்லியன் கிலோ ஆகும்.தமிழ்நாட்டில் 35 மில்லியன் கிலோ புகையிலையை ஆண்டுதோறும் உற்பத்தி செய்கிறது. சீனா, பிரேசிலுக்கு பிறகு இந்தியா புகையிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக இடம் பெறுகிறது. புகையிலையால் ஆண்டுக்கு ரூ.2000 கோடி அன்னியச் செலாவணியாகவும், ரூ.10 ஆயிரம் கோடி கலால் வருவாயாகவும் கிடைக்கிறது.
புகையிலையினால் 3 கோடியே 60 லட்சம் பேர்வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 60 லட்சம் விவசாயிகள் புகையிலை பயிரிடுகிறார்கள். இந்தியாவில் 4.4 கோடி பேர் பீடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.பீடி தொழில் தொடர்பான பணிகளில் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாட்டிலேயே பீடி தொழிலாளர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. உலக பீடி உற்பத்தியில் 85 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80 கோடி பீடிகள் விற்பனையாகின்றன.மேற்கூறிய உண்மைகள், இந்தியாவில் இருந்து புகையிலையை ஒழிப்பது ஒரே நாளில் நடந்துவிடும் காரியமல்ல என்பதை அழுத்தமாக சொல்கின்றன. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் புகையிலை பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் பயிரிட ஆலோசனை அளித்து வருகிறது. மாற்றுப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளது.
இதேபோன்று பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களை வேறு தொழில்கள் ஈடுபடவும் அரசு ஊக்குவித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.புகையிலை என்னும் கொடிய அரக்கனை எதிர்த்துப் போராட மத்திய, மாநில அரசுகளுடன் தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள், பிற அரசுத் துறைகள் என அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்

மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களை விடவும் பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்றாலும், மாரடைப்பு வராது என்/று கூற முடியாது. பெண்களுக்கு வயிற்றின் மேல் பகுதியிலும் நெஞ்சு எலும்புகளிலும் வலி ஏற்படுகிறது. சில சமயம் வியர்வை, தலை லேசாகுதல், தலை சுற்றல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.இவற்றை பெரும்பாலான பெண்கள் அலட்சியப்படுத்தி விட்டு, டாக்டரிடம் செல்வதில்லை.இதயத்தில் ஒரு சிலருக்கு சில அசவுகரியங்கள் ஏற்படும். அதே அசவுகரியங்கள் மற்றவர்களுக்கு ஏற்படாது.
ஒருவர் இதய வலியை அதிகமாக உணர்வார். மற்றவர் அதே வலியை உணரமாட்டார். எனவே, மருத்துவரிடம் நீங்களாகவே சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அப்போது இதயத்தின் தசைப் பகுதிகளும் சேதமடைகின்றன.மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன?நெஞ்சுவலி தொடர்ந்து இருப்பது, இடதுபக்க தோள் பட்டையில் அழுத்தம், முதுகில் வலி போன்றவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.பெண்களுக்கு நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் வலி அல்லது அழுத்தம் கை மற்றும் தாடைகளுக்குப் பரவும். மூச்சு வாங்குதல், மயக்கம், வியர்த்தல், தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவையும் முக்கிய அறிகுறிகளாகும்.இதயத்திற்குச் செல்லும் ரத்த அடைப்புகளைச் சரிசெய்வதற்கு பல்வேறு நவீன சிகச்சைகள் இன்றைய கால கட்டத்தில் அளிக்கப்படுகின்றன.பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்ட்டி மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகளைச் சரி செய்யலாம்.
பைபாஸ் அறுவை சிகிச்சை மூலமும் இதயத்துக்கு ரத்தம் செல்லும் மாற்றுப் பாதையை அமைத்து நன்கு செயல்படச் செய்யலாம்.ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டு இதய வலி உள்ளவர்கள், எந்தவிதச் சங்கடமும் வலியும் இல்லாமலும் மருத்துவமனையில் தங்காமலும் நவீன முறையில் சிகிச்சை பெறவும் முடியும்.எனவே நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் அது எதனால் ஏற்படுகிறது? என்பதை அறிந்து, முடிந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் ஈசிஜி பரிசோதனை செய்த பின், உரிய இதய நோய் மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.சாதாரண நெஞ்சுவலிதானே என்று டாக்டரிடம் செல்லாமல் இருந்தால், அது பின்னாளில் பெரிய ஆபத்தை உருவாக்கி விடக்கூடும்.

குழந்தைகளின் உடல் பருமனுக்கு பெற்றோரே பொறுப்பு

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பொறுப்பு அவர்களின் பெற்றோருக்கே என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளை குண்டாக வளர்வதற்கு அனுமதித்து விட்டு, பின்னர் அவர்களின் உடல் நலத்தில் தங்களுக்கு அக்கறை இல்லை என்று பெற்றோர் கூற முடியாது என சிட்னியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் பெற்றோர்கள் குறித்து டாக்டர்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்.தவிர குழந்தைகள் குண்டாக வளர்வதால், குறிப்பிட்டதொரு நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகள் குண்டாக இருப்பதால், அவர்கள் பல்வேறு அவதிக்குள்ளாக நேரிடும் என்று டாக்டர்களை மேற்கோள்காட்டி அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.குழந்தைகள் ஓரளவுக்கு மேல் குண்டாக இருந்தால், அவர்களின் உடல் நலத்தின் மீது பெற்றோர் கவலை கொள்ள நேரிடுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் குறைந்த அளவிலான உணவை சாப்பிடுவதையும், போதிய உடற்பயிற்சியை மேற்கொள்வதையும் உறுதி செய்ய பெற்றோர் தவறி விடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.சில குழந்தைகள் ஒருநாளில் சுமார் 6 மணி நேரம் வரை டி.வி. முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நிலை உள்ளதாகவும், இதனால் கொழுப்புச் சத்துடன் கூடிய கல்லீரல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தைகளின் உணவாக எண்ணெயுடன் கூடிய பதார்த்தங்களை கொரித்துக் கொண்டிருப்பதால்,வழக்கமான உணவுப் பழக்க முறை மாறி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே குழந்தைகளின் உடல் பருமனில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

பார்வையிழப்பைத் தடுக்கும் உடற்பயிற்சி

தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கண் பார்வையிழப்பில் இருந்து தப்பி விடுவார்கள் என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டுள்ள 41 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின்படி, அவர்களுக்கு கண்புரை நோய் மற்றும் வயோதிகத்தினால் ஏற்படும் தசை தொடர்பான நோய்கள் ஏற்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் தீவிரமாக உடற்பயிற்சி செய்வோருக்கு கண் பார்வை இழப்பு ஏற்படாது என்றும், கண் நோய்களும் ஏற்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.கண்களுக்கு வழக்கமான பரிசோதனை செய்வதாலும் பார்வையை சீராக வைத்திருக்க முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட பால் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் தகுதிக்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால், கண் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து விடுபடுவதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.பார்வை குறைபாட்டிற்கு முக்கியக் காரணமாக விளங்குவது கேட்டராக்ட் எனப்படும் கண்புரை நோய் ஆகும். அமெரிக்காவைப் பொருத்தவரை 65 வயதானவர்களில் 50 விழுக்காட்டினருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது.வயோதிகத்தினால் ஏற்படும் கண் லென்ஸ் பாதிப்புகளினாலும் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 75 வயது நிரம்பியவர்களில் 28 விழுக்காட்டினருக்கு இந்நோய இந்த பாதிப்பு உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
வாரத்திற்கு 5 நாட்கள் வேகமாக நடைபயிற்சி உள்ளிட்ட 30 நிமிட நேர தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த உடற்பயிற்சியில் ஓட்டமும் அடங்கும்.என்றாலும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு கண்புரை நோய் ஏற்படாது என்று உத்தரவாதமாகக் கூறி விட முடியாது.என்றாலும் வாக்கிங் செல்வதன் மூலம் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என்று தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் உங்களது அடிமைகள் அல்ல

எல்லோருக்கும் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய செல்வம் அவர்களது குழந்தைகள்தான். ஆனால் பலரும் அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றனர்.குழந்தைகளின் விருப்பப்படி அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை தங்களது கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்வது ஒரு வகைப் பெற்றோர். இதில் குழந்தையின் விருப்பமும் நிறைவேறிவிடுகிறது.பெற்றவர்களும் நிம்மதியாக இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சில பெற்றவர்கள், எல்லாமே தங்கள் இஷ்டப்படித்தான் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களது விருப்பத்தை குழந்தையின் மீது திணிக்கின்றனர். தங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.ஆடை, அலங்காரம், பள்ளிக் கல்வி முறை, கூடுதல் வகுப்புகள் என அனைத்துமே பெற்றவர்களது விருப்பத்தின்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.தாங்கள் செய்ய முடியாததை, படிக்காததை எல்லாம் பிள்ளைகள் படித்துவிட வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதையெல்லாம் விட, இந்த வசதி எல்லாம் எங்களுக்கு கிடைக்கல, நீயாவது இதை பயன்படுத்தி படி என்று அறிவுரை வழங்குவார்கள்.
இதில் என்ன குற்றம் என்று கேட்காதீர்கள், உங்களைப் போன்றே உங்களது குழந்தைகளுக்கும் ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். அவர்களுக்குள் ஒரு தனித் திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்தும் வகையிலான படிப்புகளைத்தான் அவர்கள் நாடுவார்கள்.அதைவிடுத்து அவர்களுக்கு விருப்பமில்லாத வகுப்பில் சேர்த்துவிட்டு, அவர்களைப் படி படி என்றால் எப்படி அவர்கள் படிப்பார்கள்.செலவு செய்யவும், சேமித்து வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு என்று செலவு செய்ய காசு கொடுங்கள். அதனை தேவையான பொருட்களை வாங்கவும், மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்கவும் பழக்கப்படுத்துங்கள்.
சின்னப்பசங்க அவங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாமே வாங்கிக் கொடுக்கும்போது அவர்களுக்கு எதற்கு காசு என்று கேட்காதீர்கள். அப்படி செய்யும்போதுதான் அவர்கள் வீட்டிலேயே காசை திருடும் பழக்கம் ஏற்படுகிறது.நமது குழந்தை செல்வங்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை பெற்றோருக்குத்தான் உள்ளது. ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும்.
குழந்தை என்பது கையில் இருக்கும் பறவை போன்றது, அழுத்திப் பிடித்தால் இறந்து போகும், பிடிக்காமல் விட்டுவிட்டால் பறந்து போகும், எனவே இதமாக தடவிக் கொடுத்து பதமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.