பன்றிக் காய்ச்சல் - உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக்கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின் பெயர் இது.
கடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில் பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
FILEமுதன் முதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய், பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, தற்போது இந்தியாவின் புனே நகரை சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும் அளவுக்கு பரவியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும்,அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் அவசியமாகிறது.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1 N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.
கடந்த 1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ் மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும்,1976ம் ஆண்டில் நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:
H1N1 வைரஸ், ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது. நீண்டகால முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால், மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பன்றிகள் வசிக்கும் இடம் அல்லது பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்நோய் பரவி, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. ஆனால், பன்றி இறைச்சி சாப்பிடுவதன் மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை. குளிர் மற்றும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது. குறிப்பாக இந்த நோய்த் தொற்றுக்குள்ளாகி 5 முதல் 6 நாட்களில் பிறரையும் தொற்றுகிறது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்:
உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள்:
* மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
* பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
* கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உலகளவில் பன்றிக் காய்ச்சல்:
FILEகடந்த ஜூன் 11ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்ட இந்த பன்றிக் காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் விமான நிலையங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 34 ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 816 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment